
பொழுதுபோக்கு
பாரிஸில் ரசிகர்களின் மனதை தொட்ட அஜித்! வைரல் வீடியோ!
நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் ஏகே 61 வது படத்தில் நடித்துவருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது .
தற்போழுது இந்த படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட அஜித் ஐரோப்பாவில் விடுமுறையை கழித்து வருகிறார். அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது. அஜித் பல்வேறு இடங்களையும் சுற்றிப்பார்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது அஜித்தின் வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது
அஜித் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈஃபில் டவரை சுற்றிப்பார்க்க சென்ற போது, ரசிகர்கள் திடீரென சூழ்ந்துகொண்டனர். அப்போது ரசிகர்கள் கூட்டத்தை பார்த்ததும் சற்றும் டென்ஷன் ஆகாமால் கோவப்படாமல் அஜித், அவர்கள் அனைவருடன் அன்பாக பேசி நலம் விசாரித்து, பின்னர் தனித்தனியாக ஒவ்வொருவருடனும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
அங்கு அஜித் அவரது ரசிகர் ஒருவரின் டி-ஷர்ட்டிலும் தனது ஆட்டோகிராப்பை போட்டுள்ளார். அஜித்தின் இந்த பண்பான குணத்தை பார்த்த ரசிகர்கள் இந்த வீடியோவை டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.
மேலும் இம்மாத இறுதியில் அஜித் இந்தியா திரும்ப உள்ளாராம். அவர் வந்த பின் புனேவில் ஏகே 61 படத்தின் அடுக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளார்.அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாரா 75வது படத்தின் டைட்டில் தெரியுமா? கதைக்களம் இதோ!
இந்த படம் தீபாவளிக்கு வரும் என எதிபார்க்கப்பட்ட நிலையில் படம் தற்போழுது பொங்கலுக்கு ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம்.
Latest video of #AK sir from Paris !
Credits : @AjithNetwork#AjithKumar #AK61#Valimai pic.twitter.com/jihU0ASR2J
— TRENDS AJITH (@TrendsAjith) July 11, 2022
