அடுத்த ஆக்‌ஷனில் இறங்கும் அஜித்: அதுவும் எந்த படத்தில் தெரியுமா?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித். இவர் நடித்தத வலிமை திரைப்படமானது லாக்டவுன் ககாரணமாக தள்ளிப் போன நிலையில் வரும் பிப்ரவரி 24ம் தேதியே வலிமை திரைப்படம் வெளியாகும் தகவல்கல் வந்தன. ஆனால் தயாரிப்பாளர் போனி கபூரின் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஜித் ‘தல 61’ படத்தையும் எச்.வினோத் தான் இயக்க உள்ளார். நேர்கொண்ட பார்வை, வலிமை போன்ற படங்களை தயாரித்த போனி கபூர் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், வில்லனாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அஜித், தற்போது மீண்டும் அவ்வாறு நடிக்க உள்ளதாக கூறப்பட்டுவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதம் 9 ஆம் தேதி  ஐதராபாத்தில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment