ரசிகர்களே கேட்டுக்கோங்க; விஜய் மக்கள் இயக்கத்தில் அஜித், சூர்யா ரசிகர்கள் அன்னதானம்!!
பொதுவாக ரசிகர்கள் எல்லாரும் தங்களது நடிகர்களுக்கு சப்போர்ட்டாக பேசி கொண்டாடுவார்கள். அதிலும் ஒரு சில ரசிகர்கள் பிற நடிகர்களை விமர்சனம் செய்து கேலி கிண்டல் செய்தும் பேசுவார்கள்.
இது ரசிகர்களிடையே பெரும் சண்டையையும் வாக்குவாதத்தையும் ஏற்படுத்தும். இருப்பினும் என் ஃப்ரண்ட போல யாரு மச்சான் என்பதுபோல அவர்கள் ஒன்று கூடி விடுவார்கள். அவ்வாறு ஒன்று கூடி தற்போது ஏழை எளிய மக்களுக்கு ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிக்கும் செயல் கோயம்புத்தூர் மாநகரில் நடைபெற்றுக் கொண்டு வருகிறது.
அதன்படி கோயம்புத்தூர் மாவட்டம் 79 வார்டு செல்வபுரம் பகுதியில் எல்ஐசி பாய்ஸ் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் கடந்த இரண்டு மாதங்களாக ஆதரவற்றவர்களுக்கு இலவச அன்னதான உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இதில் அவ்வப்போது நடிகர் சூர்யா மற்றும் அஜித்தின் ரசிகர்கள் இணைந்து கொள்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதன்படி நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியானபோது விஜய் மக்கள் இயக்கத்தில் தாமாகவே முன்வந்து அஜித் ரசிகர்கள் அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதோடு மட்டுமில்லாமல் அஜித் மகன் பிறந்தநாள் போது அஜித் ரசிகர்கள் அன்னதானம் வழங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது, இதில் அப்போது சூர்யாவின் ரசிகர்களும் இணைந்து கொள்வார்கள்.
இதனால் அங்கு என்னதான் தனித்தனி நடிகர்களுக்கு ரசிகர்கள் கூட்டமாக இருந்தாலும் ஆதரவற்றோருக்கு உணவு அளிக்க வேண்டும் என்றால் ஒன்று கூடி வருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
