
பொழுதுபோக்கு
வெளிநாட்டில் ஷாப்பிங் செய்யும் அஜித் – வைரலாகும் வீடியோ!
அஜித் தற்போழுது ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட ஐரோப்பாவில் விடுமுறையை கழித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
இது தவிர சில தினங்களுக்கு முன்பு, தனது ரசிகரின் பிறந்தநாளுக்கு அஜித் வாழ்த்து தெரிவித்து அவருடன் பேசிக்கொண்டே அவருக்கு கையால் வாழ்த்து கடிதம் எழுதிய மற்றொரு வீடியோ இணையத்தில் வைரலாக மாறியது.
இதற்கிடையே முதல் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில் ‘ஏகே 61’ படத்தின் மூன்றாவது ஷெட்யூல் இம்மாதம் சென்னையில் தொடங்கவுள்ளது.அதனால் லண்டனில் விடுமுறை முடிந்து, அஜித் விரைவில் இந்தியா திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது ‘ஏகே 61’ படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்தனர்,ஆனால் ரிலீஸ் தேதி மாற்றமாக வாய்ப்புள்ளத்தகாக கூறப்படுகிறது.
மீண்டும் ரஜினியுடன் இணையும் யோகி பாபு! படம் மாஸா இருக்குமே!
Ajith sir in London.
| Video: Yathees | @arianoarun | #Ak #Ajith #AjithKumar | #Ak61 | pic.twitter.com/qKGjtfa4Xy
— Ajith (@ajithFC) July 4, 2022
இதற்கடுத்ததாக அஜித் தனது அடுத்த படமான ‘ஏகே 62’ படத்தில் நடிக்கிறார். இதனை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
