5 கோடி கடனில் இருந்த அஜித்.. தமிழ் மண்ணுக்காக 2 கோடி ரூபாய் வாய்ப்பை நிராகரித்த நெகிழ்ச்சியான செயல்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான நடிகர் அஜித்குமார், நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களின் இமாலய வெற்றிக்கு பிறகு துணிவு படத்தில் நடித்து இருந்தார்.

இந்தாண்டு பொங்கலை முன்னிட்டு ஜனவரி மாதம் 10 ஆம் தேதி துணிவு திரைப்படம் வெளிவந்தது. துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மிகப்பெரிய அளவில் வசூலை வாரிக் குவித்தது. துணிவு படத்தினை அடுத்து அஜித், விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிப்பில் இயக்குனர் மகிழ் திருமேனி விடாமுயற்சி படத்தை இயக்க உள்ளார். ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.

WhatsApp Image 2023 06 15 at 7.19.39 PM

இந்த ஜூன் மாதம் முதல் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அருண் விஜய் நடிக்க உள்ளார். மேலும் கதாநாயகியாக நடிகை த்ரிஷா நடிக்க உள்ளார். தற்போது துபாயில் இருக்கும் அஜித், விரைவில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் நடிகர் அஜித் குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. 2000 வாக்கில் நடிகர் அஜித், சுமார் 5 கோடி ரூபாய் வரை கடன் சுமையில் இருந்ததாகவும் அப்போது பிரபலமான அந்நிய குளிர்பான நிறுவனம் ஒன்று அஜித்தை அனுகி 2 கோடி ரூபாய் சம்பளத்தில் விளம்பர படம் ஒன்றில் நடிக்க அஜித்தை கேட்டுள்ளனர். இந்த 2 கோடி ரூபாய் ஆஃபரை மறுத்த அஜித், அந்த குளிர்பான விளம்பரத்தில் நடிக்க மறுத்துள்ளார். மேலும் இந்திய குளிர்பானங்களை பிரபலப்படுத்த விளம்பரங்களில் நடிப்பேன். அந்நிய நாட்டு குளிர்பானங்களை பிரபலப்படுத்த மாட்டேன் என்று கூறியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

WhatsApp Image 2023 06 15 at 7.19.40 PM 1

பின்னர் தான் அந்த அந்நிய குளிர்பான விளம்பரத்தில் நடிகர் விஜய் நடித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...