அந்த விஷயத்தில் விஜய்யை முந்த அஜித் போட்ட திட்டம்.. பாகுபலிக்கே டஃப் கொடுப்பார் போல தெரியுதே!

நடிகர் அஜித் குமார் ராஜ ராஜ சோழனின் கதையில் நடிக்க திட்டமிட்டு இருந்த தகவல்கள் வெளியாகி உள்ளன. முதன் முதலாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ராஜ ராஜ சோழன் படத்தில் கம்பீரமாக நடித்திருந்தார். இதை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி ராஜ ராஜ சோழனாக இயக்குநர் மணிரத்தனம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் அஜித் குமாரும் ராஜ ராஜ சோழன் வேடத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்ததாக வலைப்பேச்சு அந்தணன் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தெலுங்கில் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழிலும் வராலாற்று கதையை இயக்க சில இயக்குநர்கள் முன்வந்த நிலையில் , இயக்குநர் மனிரத்னம் பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்டமான படத்தை ஜெயம் ரவி, கார்த்தி, சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற பல முன்னனி நடிகர் நடிகைகளை வைத்து இயக்கியிருந்தார். இதை தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார்.

ராஜ ராஜ சோழனாக நடிக்கிறாரா அஜித்

அடுத்ததாக, டைரக்டர் ஷங்கரும் வேள்பாரி திரைப்படத்தை இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் குமாரும் ராஜ ராஜன் தஞ்சை பெரிய கோவிலை எப்படி கட்டினார் என்னும் கதையை மையமாக கொண்டு ஒரு பிரம்மாண்ட படத்தில் நடிக்க திட்டமிட்டு இருந்ததாகவும் அந்த படத்தை விஷ்ணுவர்தன் இயக்க இருந்ததாகவும் கூறியுள்ளார் அந்தணன்.

நடிகர் அஜித்தை வைத்து பில்லா, ஆரம்பம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த விஷ்ணுவர்தன் ராஜ ராஜ சோழன் கதையையும் அவரையே வைத்து உருவாக்க எழுத்தாளர் பாலமுருகனுடன் சேர்ந்து முயற்ச்சி செய்ததாக கூறப்படுகிறது.

விஷ்ணுவர்தனுக்காக வெயிட்டிங்

இந்நிலையில் அந்த படத்தை இயக்குவதற்கு முன்பாகவே விஷ்ணுவர்தன் பாலிவுட்டுக்கு சென்று பிசியாகிவிட்டார். சித்தார்த் மல்கோத்ரா மற்றும் அவரது மனைவி கியாரா அத்வானியை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கிய ஷெர்ஷா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று தேசிய விருதையும் அள்ளியது.

அந்த படத்தை முடித்து விட்டு அஜித் படத்தை இயக்க திரும்புவார் என எதிர்பார்த்தால், அங்கேயே அடுத்தடுத்த படங்களை இயக்கும் அளவுக்கு மனுஷன் பிசியாகி விட்டார் என்கின்றனர்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பை விரைவில் ஆரம்பிக்க உள்ள நடிகர் அஜித் குமார், விடாமுயற்சிக்கு பிறகு மீண்டும் தஞ்சாவூர் கோயில் கட்டிய பெருஞ்சோழன் ராஜ ராஜனை பற்றிய படத்தை எடுக்க ஆரம்பிப்பார் என்றும் அந்தணன் சமீபத்திய பேட்டியில் பேசியுள்ளார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews