அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் பொங்கலுக்கு வெளியாக இருந்த நிலையில் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் அஜீத் ரசிகர்கள் மிகுந்த சோர்வடைந்துள்ளனர்.
ஹெச். வினோத் இயக்கியுள்ள இப்படம் எப்போது வரும் என்றே தெரியாத நிலை நிலவுகிறது.
பொதுவாக அஜீத் தொடர்ந்து ஒரே இயக்குனரின் படங்களிலே அடுத்தடுத்து நடிப்பார் இதற்கு முன் சிறுத்தை சிவா இயக்கத்தில் வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்களில் நடித்தார்.
அதன் பிறகு ஹெச்.வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வையில் நடித்தார் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்நிலையில் மூன்றாவதாகவும் ஹெச் வினோத் இயக்கத்திலே வலிமை படத்தை தயாரித்த போனிகபூர் தயாரிப்பிலேயே மீண்டும் படம் நடிக்கிறார் அஜீத்.
இதில் இரட்டை வேடங்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ரோல் நெகட்டிவ் ரோலாக வில்லன் ரோல் போல் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.