தீபாவளி ரேஸில் இருந்து விலகிய தல! என்ன காரணம் தெரியுமா?

தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களின் படங்கள் வெளிவருகிறது என்றாலே ரசிகர்கள் அதனை கொண்டாடி மகிழ்வார்கள். அதிலும் குறிப்பாக ஒரு சில முக்கிய நாட்களான பண்டிகை நாட்களில் டாப் நடிகர்களின் படம் வருகிறது என்றால் அந்த படத்தை பண்டிகையை விட அமோகமாக கொண்டாடுவார்கள்.

அவ்வாறு இருக்கையில் இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு பல நடிகர்களின் படங்கள் வெளியாக போட்டி உள்ளது. நடிகர் கார்த்தி மற்றும் ராசி கண்ணா நடிப்பில் மித்ரன் இயக்கத்தில் பிரம்மாண்ட செலவில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் சர்தார். இப்படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

maxresdefault 34

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்து வெற்றி பெற்ற டான் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்து என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் கூட சமீபத்தில் வெளிவந்து வரவேற்பை பெற்றது.

நடிகர் தனுஷ் மற்றும் சம்யுக்தா மேனன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வாத்தி. இப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது தகவல் கிடைத்துள்ளது. ஆனால் கடைசி நேரத்தில் இந்த முடிவை மாற்ற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

siva prin

அஜித் தனது 61வது படத்தில் வினோத் உடன் மூன்றாவது முறையாக கை கொடுத்து நடித்து வருகிறார். இப்படத்திற்கு தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படமும் தீபாவளிக்கு வெளியாகும் என முன்னதாகவே தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தாலும் படத்தின் படப்பிடிப்பில் மாற்றம் இருக்கும் போல் தெரிய வருகிறது.

விஜய் 66 படத்தின் டைட்டிலை அஜித் பட பாணியில் வைத்த படக்குழு!

 

 

 

 

 

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment