Connect with us

ஹிந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்… போட்டி போடும் இரண்டு டாப் நடிகர்கள்…!

Ajith Kumar

பொழுதுபோக்கு

ஹிந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்… போட்டி போடும் இரண்டு டாப் நடிகர்கள்…!

ஹிந்தியில் ரீமேக்காகும் அஜித் படம்… போட்டி போடும் இரண்டு டாப் நடிகர்கள்…!

சமீபகாலமாகவே தமிழ் படங்களை ஹிந்தியில் ரீமேக் செய்ய பாலிவுட் இயக்குனர்களும், ரீமேக் படங்களில் நடிக்க நடிகர்களும் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்தாண்டு மட்டும் மாஸ்டர், கைதி, விக்ரம் வேதா, சூரரை போற்று, அருவி உள்ளிட்ட பல வெற்றி படங்கள் ஹிந்தியில் ரீமேக்காகி வருகின்றன.

தற்போது இந்த வரிசையில் நடிகர் அஜித்தின் சூப்பர் ஹிட் படமும் இணைந்துள்ளது. அதன்படி இயக்குனர் சிவா உடன் அஜித் நான்காவது முறையாக கூட்டணி அமைத்து வெற்றி கொடுத்த விஸ்வாசம் படம் தற்போது ஹிந்தியில் ரீமேக்காக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம் ஆகிய படங்கள் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற விஸ்வாசம் படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளது அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் விஸ்வாசம் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இரண்டு டாப் பாலிவுட் நடிகர்கள் போட்டி போட்டு வருகிறார்களாம். அதன்படி பிரபல நடிகர் அக்ஷய்குமார் இந்த படத்தில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும், இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

மற்றொரு புறம் விஸ்வாசம் ரீமேக்கில் நடிக்க நடிகர் அஜய்தேவ்கான் முயற்சி செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இவர்கள் இருவரில் யாரேனும் ஒருவர் படத்தில் நடிப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் நாயகியாக நடிக்க பிரபல நடிகை ஒருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top