அஜித்தின் அட்டகாசமான பைக் பயணம் வீடியோ ஒன்று இணையதளங்களில் வைரலாக வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அஜித் தற்போது இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார் என்பதும் இது குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
விரைவில் அஜித் உலக அளவில் பைக்கில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் அதற்கு பயிற்சியாகவே வட இந்தியாவில் அவர் தற்போது சுற்றுப்பயணம் செய்து வருவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அஜித் பைக் பயணம் குறித்த புகைப்படங்கள் வைரல் ஆன நிலையில் தற்போது முதன்முதலாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கரடுமுரடான பாதையில் அஜித் பைக் ஓட்டும் காட்சிகள் உள்ளதை அடுத்து இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
#AjithKumar offroading! pic.twitter.com/Aiq20mHZ4v
— Suprej Venkat (@suprej) October 27, 2021