
பொழுதுபோக்கு
தல அஜித்னா சும்மாவா! அந்த மனசுதான் சார் வேணும்!.. டிரெண்டிங் வீடியோ!
நடிகர் அஜித் தற்போழுது ஹெச்.வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் அடுத்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துவரும் அஜித் முன்னணி நடிகராக மட்டும் அல்லாமல் பல தனித்திறமைகளை தன்னிடையே கொண்டவர், அவரின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவரின் மற்ற திறமைகளுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.சினிமாவில் மட்டும் அல்லாமல் ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து வருபவர்.
சமீபத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். அது போக பைக் ரேசிங், கார் ரேசிங், துப்பாக்கி சுடுதல், போட்டோ கிராபி, ஏரோ மாடலிங், போன்றவற்றிலும் கை தேர்ந்தவர்.
அதே போல துப்பாக்கி சுடும் போட்டி நடைபெறும் இடத்தில் தன்னை காண வந்த ரசிகர்களை விரட்ட மனம் இல்லாத அஜித், ரைபிள் கிளப் மேலே ஏறி நின்று தன்னுடைய ரசிகர்களுக்கு கை அசைத்தும், தம்ப்ஸ் அப் காட்டியும், வணக்கம் வைத்தும் தன்னுடைய நன்றிகளையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார்.
இந்த போட்டியில் கலந்து கொள்ள அஜித் திருச்சி ரைபிள் கிளப் சென்றிருந்த போது, தான் ஒரு பெரிய ஹீரோ என்ற தலைக்கணம் சிறிதும் இல்லாமல் தன்னை காண வந்த அனைவரிடமும் சிரித்த முகத்துடன் உரையாடி அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டுள்ளார்.
வாரிசு படத்தின் தளபதி விஜய்யின் கெட்டப் இதுவா? வீடியோ வைரல்!
Thala is an emotion 🥺❤️#Ajithkumar𓃵 #AK61 #AK62 pic.twitter.com/ER2xkBE21o
— Bala Jith (@ThalaBalaJith) July 31, 2022
