அஜித் குமாரின் துணிவு படத்தில் இணைந்த தொலைக்காட்சி பிரபலங்கள்! யாருனு தெரியுமா?

நடிகர் அஜித் இயக்குனர் எச் வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோருடன் மூன்றாவது முறையாக இணைந்துள்ள இந்த திரைப்படம் துணிவு. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தில் அசுரன் புகழ் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்கிறார், மேலும் சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம்குமார், வீரா மற்றும் பலர் துணை வேடங்களில் நடிக்கின்றனர்.

வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாகும் என்று கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் மற்றும் மஞ்சு இருவரும் லடாக் பைக் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக குழு தற்போது தாய்லாந்துக்கு சென்றுள்ளது.

ajith trip-7

மேலும் நடிகர்கள் பற்றி பேசுகையில், இந்த படத்தில் 3 பெரிய தொலைக்காட்சி பிரபலங்களும் இணைந்துள்ளனர்.இந்த 3 பேரும் தமிழ் ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் – பவானி ரெட்டி (சீசன் 5), அமீர் (சீசன் 5) மற்றும் சிபி சந்திரன் (சீசன் 5) மூலம் தங்களுக்குள் பெயர் பெற்றவர்கள். பவானி ரெட்டி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாகிர்ந்துள்ளார்.

குந்தவை திரிஷாவிற்கு போட்டியாக களமிறங்கிய அதிதி! ராணி கெட்டப்பில் கலக்கல் போட்டோஸ்!

அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படம் தமிழில் மட்டுமின்றி பல மொழிகளிலும் வெளியாகும் என நம்பப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment