அப்படி ஒரு காட்சி வேணாம்.. வாலி படத்தில் அஜித் பிடிவாதத்தால் சூப்பர் சீனை ஷூட் செய்யவே தயங்கிய எஸ் ஜே சூர்யா..

தமிழ் சினிமாவில் தல என மக்களால் பாசமாக அழைக்கப்பட்டு வந்தவர் தான் அஜித் குமார். பின்னர் சில காரணங்களால் அந்த பெயரில் தன்னை குறிப்பிட வேண்டாம் என அஜித் குமார் அறிக்கை வெளியிட பலரும் அதனை ஏற்றுக் கொண்டாலும் சிலர் இன்னும் அவரை தல என்று தான் தொடர்ந்து அழைத்து வருகின்றனர்.

பொது நிகழ்ச்சிகளிலும் அஜித் குமார் அதிகம் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவருக்கான ரசிகர்கள் பட்டாளம் என்பது எப்போதுமே அதிகம் தான். சமீபத்தில் கூட இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை அவரது திரைப்படங்கள் வெளியானால் கூட அதனை கொண்டாடவும் ரசிகர்கள் தயாராக தான் இருந்து வருகின்றனர். அந்த அளவுக்கு ரசிகர்கள் மத்தியில் பெயர் எடுத்துள்ள அஜித் குமார், ஹீரோவாக நிறைய படங்களில் நடித்திருந்தாலும் அவரது வில்லத்தனமான நடிப்பு தான் பலரின் ஃபேவரைட்.

வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் நடித்திருந்த மங்காத்தா திரைப்படத்திற்கு பிறகு நிறைய படங்களில் அவர் நடித்து விட்டாலும் இன்னும் அந்த வில்லத்தனமான விநாயக் கதாபாத்திரம் உருவாக்கிய தாக்கம் இன்றளவிலும் ரசிகர்களை பெரிய அளவில் பாதித்திருந்தது. இதனிடையே, அஜித் குமார் அடுத்து நடித்து வரும் Good Bad Ugly படத்திலும் கூட வில்லன் கதாபத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஆனால் மங்காத்தாவிற்கு முன்பு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான வாலி படத்தில் பேசாமலே பார்வையில் தனக்குள் இருக்கும் மிருகத்தை வெளிப்படுத்தி இருப்பார் அஜித் குமார். தம்பியின் மனைவி மீது காதல் வயப்படும் அண்ணனாகவும், காதல் கணவனாக வரும் தம்பியாகவும் இரட்டை வேடத்தில் அஜித் நடித்த வாலி தான் எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் உருவான முதல் படம்.

இந்த படத்தில் ஒரு பரபரப்பு காட்சி இருந்தும் அஜித் அதில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தற்போது பார்க்கலாம். அஜித் இரட்டையர் என்பதால் ஊமையாக இருப்பது மட்டும் தான் அவர்கள் இடையே வித்தியாசமாக இருக்க, சிம்ரனுக்கு வில்லன் அஜித் மீது சந்தேகம் வருகிறது. இது தம்பி அஜித்துக்கும் தெரிய வர, அவர் ஒரு நாள் மீசையை எடுத்து விட்டு சிம்ரன் முன்பு தோன்றுகிறார்.

இனி எனது அண்ணனுக்கும், எனக்கும் வித்தியாசம் இருக்கிறது என மீசை இல்லாததை குறிப்பிட, இருவருமாக வெளியே சென்று அஜித்தை பார்த்தால் அவரும் மீசை இல்லாமல் அங்கே நின்று கொண்டிருக்கிறார். இப்படி ஒரு அற்புதமான ட்விஸ்ட் படத்தின் காட்சியாக எஸ் ஜே சூர்யா எழுதி இருக்க, மீசை எடுக்க வேண்டும் என்பதால் அதில் நடிக்க மறுத்த விட்டாராம் அஜித் குமார்.

ஒரு வேளை இப்படி ஒரு காட்சி வாலி படத்தில் இடம்பிடித்திருந்தால் நிச்சயம் அஜித்குமார் என்ற வில்லன் நடிகரை இன்னொரு லெவலுக்கு கொண்டு போயிருக்கும் என்பது தான் ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...