Connect with us

2023ல் பாக்ஸ் ஆபிஸில் மோதும் அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் படங்கள்?

throwback vijay ajith unseen viral throwback pic is now trending photos pictures stills

பொழுதுபோக்கு

2023ல் பாக்ஸ் ஆபிஸில் மோதும் அஜித் குமார் மற்றும் தளபதி விஜய் படங்கள்?

அஜித் குமாருக்கும், தளபதி விஜய்க்கும் இடையே எப்போதும் சினிமாவில் போட்டி இருந்து வருகிறது. இருவரும் ரஜினிகாந்த்-கமல்ஹாசன் ஜோடியைத் தொடர்ந்து திரையுலகில் இந்தக் காலத்தின் திரைப் போட்டியாளர்களாகக் கருதப்படுகிறார்கள். தற்போது, இந்த நட்சத்திரங்கள் விரைவில் பாக்ஸ் ஆபிஸில் மோத உள்ளதாக சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது.

veeram jilla

அஜீத்தும் விஜய்யும் கடைசியாக 2014 பொங்கலின் போது ‘வீரம்’ மற்றும் ‘ஜில்லா’ ஒரே தேதியில் வெளியானபோது பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டினார்கள். இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் நன்றாகவே வசூல் செய்தன. ஆதாரங்களின்படி, அஜீத் குமாரின் ‘AK61’ 2023 பொங்கலின் போது தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ படத்துடன் மோதவுள்ளது.

தளபதி விஜய்யின் ‘வாரிசு’ திரைப்படம் 2023 பொங்கலுக்கு பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளர்கள் அறிவித்தது அனைவரும் அறிந்ததே. மறுபுறம், முதலில் 2022 தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டிருந்த ‘AK61’ திரைப்படம் தள்ளி வைக்கப்பட்டது.

படப்பிடிப்பை முடிக்க குழுவிற்கு நேரம் எடுக்கும் என்பதால் தேதி மாற்றபட அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ajith vijay fight

திரையரங்குகளில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் டீசர்!

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top