அன்றும் இன்றும் என்றுமே தல அஜித் தான்.!! இதற்கெல்லாம் யாரும் கிடையாது; உருகும் ஃபேன்ஸ்!!
எந்த ஒரு மனிதரின் ஆதரவும் இல்லாமல் சினிமா துறையில் தானாக ஒவ்வொரு படிக்கட்டுகளில் ஏறி இன்று உச்சத்தில் மிகப் பெரிய நட்சத்திரமாக உள்ளவர்தான் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மக்களால் தல என்று அழைக்கபடுகிறார்.
இவரின் திரைப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியானது. அதன்படி வலிமை திரைப்படம் 2 ஆண்டுகளுக்கு பின்பு 24-ம் தேதி வெளியாகி மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. தற்போது வரை படம் ஓடுகின்ற ஒவ்வொரு திரையரங்கிலும் முழு காட்சியினை பெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த அளவிற்கு வலிமை திரைப்படத்திற்கு ஆதரவு மற்றும் வசூல் சாதனைகள் கிடைத்துக் கொண்டு வருகிறது இதில் எப்போது போல தனது பாணியில் பைக் ஸ்டண்ட்களை தாமாகவே தல அஜித்குமார் செய்துள்ளார்.
அந்த பைக் ஸ்டாண்டில் போது அஜித்குமாருக்கு விபத்து ஏற்பட்டு கைகள் கால்களில் காயங்கள் ஏற்பட்டது, போட்டோக்கள் இணையதளத்தில் வெளியாகி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.
இந்த நிலையில் தல அஜித்தின் ரசிகர்கள் அன்றும் இன்றும் என்றுமே தல அஜித் குமார் பைக் ஸ்டண்ட்களுக்கு தாமாகவே நடிக்கிறார் என்பதுபோல எடிட் செய்து ஷேர் செய்துள்ளனர். அதன்படி மங்காத்தா திரைப்படத்தின் போதும் ஒரு பைக் ஸ்டாண்டு இருந்தது.
அதில் தல அஜித் குமார் நடித்த அப்போது அவருக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெளியாகவுள்ள வலிமை திரைப்படத்திலும் பைக் ஸ்டண்ட் நடித்தார். அவருக்கு தற்போது 50 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் எந்த வயதாக இருந்தாலும் தாமாகவே முயற்சி செய்து வெற்றி அடையும் தல அஜித் குமாருக்கு பலரும் பாராட்டி வருகின்றனர்.
