அஜித்-ஹெச்.வினோத்-போனி கபூர் கூட்டணி மீண்டும் மூன்றாவது முறையாக இணைந்து ‘அஜித் 61’ படத்தை உருவாக்கியுள்ளனர்.இதில் நாயகியாக மஞ்சு வாரியர் நடிக்கிறார். ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போழுது விசாகப்பட்டினத்தில் நடத்த திடடமிட்டுள்ளனர்.
வங்கி கொள்ளை தொடர்பான கதையில் இந்த படம் தயாராகிவருவதால் படப்பிடிப்பிற்காக அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.இப்படத்தினை வரும் அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி திரைக்குக் கொண்டுவர திட்டமிடபட்டது, ஆனால் தற்போழுது இந்த வருட இறுதிக்கு வருமாறு மாறியமைத்துள்ளனர்.
இதை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனது 62வது படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தின் ஷூட்டிங் அடுத்த வருட தொடக்கத்தில் அதாவது, ஜனவரி மாதம் ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அனிருத் இசையமைக்கும் அஜித் 62 வது படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.இந்த படத்தின் கதைக்களம் இயற்கை விவசாய முறையில் சத்தான உணவு வகைகளை தயாரித்து தமிழகம் முழுவதும் கொடுக்கும் நபராக அஜித் நடிக்க உள்ளார்.
படத்தில் கார்பரேட் தொடர்பான வசனங்கலோ,அரசியல் தொடர்பு வசனத்தையோ பார்க்க முடியாது , அதற்கு பதிலாக அஜித் காமெடியாகவும் ஜாலியாகவும் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் கிடைத்துள்ளது. இத்னால், ரசிகர்கள் தங்கள் ஹீரோ அஜித்தை பழைய பாணியில் பார்க்க ஒரு அறிய வாய்ப்பு கிடைத்துள்ளது.
விருமன் பட வெற்றிக்காக விலை உயர்ந்த பரிசுகளை கொடுக்கும் சூர்யா – கார்த்தி
தற்போழுது இந்த படத்திற்கு லொகேஷன் பார்ப்பதற்காக நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடி வெளிநாட்டிற்கு சுற்றுலா பயணம் சென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .