விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தும் சொதப்பிய அஜித் பட இயக்குனர்…..!

வசூல் மன்னனாக வலம் வரும் நடிகர் விஜய்யிடம் கதை சொல்லவும், அவரின் கால்ஷீட்டை வாங்கவும் பலர் காத்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் விஜய்யிடம் கதை சொல்ல வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் ஒரு இளம் இயக்குனர் கோட்டை விட்டுள்ளாராம்.

விஜய் வினோத்

அதன்படி அஜித் மற்றும் வினோத் கூட்டணியில் நேர்க்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக உருவாகியுள்ள வலிமை படம் அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் படத்தின் இயக்குனர் சமீபகாலமாக பல பேட்டிகளில் பங்கேற்று படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை கூறி வருகிறார். அதேபோல் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வினோத்திடம், “அஜித்தின் அடுத்தடுத்த படங்களை இயக்கிய நீங்கள் விஜய் படத்தை எப்போது இயக்கிவீர்கள்?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த இயக்குனர் எச்.வினோத், “விஜய் எனக்கு கதை சொல்ல மூன்று வாய்ப்புகள் கொடுத்தார். நான்தான் சொதப்பி விட்டேன். இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் நன்றாக கதையை தயார் செய்து கொண்டு சென்று அவரிடம் கதை சொல்வேன்” என கூறியுள்ளார்.

அதன்படி மாஸ்டர் படத்திற்கு முன்பே வினோத் நடிகர் விஜய்யிடம் கதை சொல்லி உள்ளாராம். ஆனால் தற்போது விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாக உள்ளார். அதேபோல் வினோத்தும் மீண்டும் அஜித் படத்தை இயக்க உள்ளதால் இவர்கள் கூட்டணி இப்போது உருவாக வாய்ப்பே இல்லை. எதிர்காலத்தில் வேண்டுமானால் உருவாகலாம் என கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment