Entertainment
அஜித்தின் விஸ்வாசம் டீசர் எப்போது?
தல அஜித் நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஸ்வாசம்’ படத்தில் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் முடிந்துவிட்ட நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு படக்குழுவினர் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட காட்சிகளை வைத்து இந்த படத்தின் டீசர் தயாரிக்கும் பணி தொடங்கிவிட்டது. மிக விரைவில் டீசர் ரிலீஸ் தேதியின் அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த டீசர் இதுவரை தமிழ் சினிமா ஏற்படுத்தியுள்ள பல சாதனைகளை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு மும்பையில் இம்மாத இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
அஜித், நயன்தாரா, யோகிபாபு, போஸ்வெங்கட், தம்பி ராமையா, ரோபோசங்கர் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது
