அஜித்தின் ‘வலிமை’ மோஷன் போஸ்டர் ரிலீஸ்!

dea9e1282eab1432b89ede47ad56de66

தல அஜித் நடித்து முடித்துள்ள ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி சற்றுமுன்னர் யூடியூப் இணையதளத்தில் ‘வலிமை’ படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ வெளியாகியுள்ளது 

இந்த மோஷன் போஸ்டரில் அஜித்தின் அட்டகாசமான கெட்டப்புகள் இருப்பதால் அஜித் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக இறுதியில் அவருடைய அழகான தோற்றம் அஜித் ரசிகர்களுக்கு இன்னும் சில மாதங்களுக்கு போதும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த மோஷன் போஸ்டரை பார்க்கும்போது அஜித்துக்கு மூன்று கெட்டப்புகள் இருக்கும் போல் தெரிகிறது. இந்த வீடியோ தற்போது மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது என்பதும் இந்த வீடியோ வெளியாகி ஒரு சில நிமிடங்களில் ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment