அஜித்தின் ‘துணிவு’ டிரைலர் தேதி, நேரம் அறிவிப்பு!

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகிய துணிவு என்ற திரைப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் குறித்த அறிவிப்பை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். துணிவு படத்தின் டிரைலர் நாளை இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அஜித் ரசிகர்கள் இந்த தகவலை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் டீஸர் வெளியாகாத நிலையில் நேரடியாக ட்ரைலர் வெளியாக இருப்பது அடுத்து அஜீத் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடிப்பில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews