’துணிவு’ ரன்னிங் டைம் இவ்வளவா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்!

அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் ஜனவரி 12ஆம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் தற்போது ’துணிவு’ படத்தின் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் தமிழகம் உட்பட இந்தியாவிலும் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

thunivu 2

இந்த நிலையில் ’துணிவு’ படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. வெளிநாட்டில் இந்த படத்திற்கான முன்பதிவு தொடங்கியுள்ள நிலையில் திரையரங்குகளில் வைத்துள்ள போஸ்டர்கள் மற்றும் டிக்கெட்டுகளில் இந்த படத்தின் ரன்னிங் டைம் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், அதிலிருந்து இந்த படத்தின் ரன்னிங் டைம் 160 நிமிடங்கள் அதாவது 2 மணி நேரம் 40 நிமிடம் என்றும் தெரியவந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

thunivu running time

அஜித்தின் ’துணிவு’ படம் போலவே விஜய்யின் வாரிசு திரைப்படமும் வெளிநாடுகளில் முன்பதிவு தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ரிலீஸ் செய்யும் இந்த படத்தில் அஜித், மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்துள்ளனர். போனிகபூர் தயாரிப்பில் எச் வினோத் இயக்கத்தில் ஜிப்ரான் இசையில் உருவாகிய இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.