செம தகவல்.. ‘துணிவு’ படத்தின் அனிருத் பாடல் இந்த தேதியில் வெளியாகிறதா?

அஜித் நடித்த ‘துணிவு’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் திருநாளில் உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் தெரிந்ததே.

chilla chill

இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’சில்லா சில்லா’ என்ற பாடலை பிரபல இசையமைப்பாளர் அனிருத் பாடி உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதி ’சில்லா சில்லா’ பாடல் வெளியாக இருப்பதாகவும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியாகும் என்றும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

chilla chilla1

அஜித் நடித்த வேதாளம் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா என்ற பாடல் போலவே ’சில்லா சில்லா’ பாடல் இருக்கும் என்று இந்த படத்திற்கு இசையமைத்த ஜிப்ரான் கூறியதை அடுத்தே இந்த பாடலுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்த படத்தை எச் வினோத் இயக்கி உள்ளார் என்பதும் போனி கபூர் தயாரிப்பில் உருவான இந்த படம் உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.