Connect with us

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்! வைரல் வீடியோ !

ajith gun

பொழுதுபோக்கு

துப்பாக்கி சுடுதல் போட்டியில் அஜித்! வைரல் வீடியோ !

இன்று நடைபெற்ற 47வது தமிழ்நாடு ரைபிள் துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் அஜித்குமார் பங்கேற்றுள்ளார் . ஜூலை 25ம் தேதி துவங்கிய இப்போட்டி, கோயம்புத்தூரில் ஆரம்ப சுற்று போட்டிகள் நடந்து முடிந்தது .

அதை தொடர்ந்து, மீதமுள்ள போட்டிக்காக அஜித் திருச்சிக்கு வந்தார். ரைபிள் ஷூட்டிங் சாம்பியன்ஷிப்பில் அஜித் பங்கேற்ற புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில்

aa 1

வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் அஜித் குமார் ஆறு பதக்கங்களை வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போழுது ஜூலை 2022 இல் தனது பைக் பயணத்திலிருந்து திரும்பிய பிறகு, அவர் பயிற்சி செய்து அடுத்த பதிப்பில் பங்கேற்க முடிவு செய்தார்.

இந்நிலையில் அஜீத் குமார் துப்பாக்கி சுடும் முதற்கட்ட சுற்றில் பங்கேற்றார். 10மீ, 25மீ, 50மீ பிஸ்டல் துப்பாக்கிச் சுடுதல்களிலும் கலந்துகொண்டார். ஜூலை 27 அன்று திருச்சி ரைபிள் கிளப்பில் அவர் காணப்பட்டார், அங்கு போட்டியின் மீதமுள்ள லெக் நடைபெறுகிறது.

ajith 3 final

அவரை உற்சாகப்படுத்த அவரது ரசிகர்கள் திருச்சி ரைபிள் கிளப் வெளியே திரண்டதை அறிந்தார். அஜீத் தனது ரசிகர்களை கூப்பிய கைகளுடன் வரவேற்றார் மற்றும் அவர்களுக்கு கட்டைவிரல் காட்டினார். அஜித் போட்டியில் கலந்து கொண்டதால் மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தனுஷின் வாத்தி ஃபர்ஸ்ட் லுக் ! நாளை பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகும் டீசர்!

அஜித் தற்போழுது ’ஏகேஎ 61’ படத்தில் நடித்து வருகிறார் ,இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் புனேவில் நடைபெறவிருக்கும் நிலையில் இந்த படப்பிடிப்பில் அஜீத் கலந்து கொள்ள இருப்பதாகவும் அஜித்துடன் மஞ்சுவாரியார் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்வார்கள் என்று கூறப்படுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top