’ஏகே 62’, ‘சந்திரமுகி 2’: இரண்டு படங்களின் உரிமையை பெற்ற பிரபல ஓடிடி நிறுவனம்!

அஜித் நடிக்கவிருக்கும் ‘ஏகே 62’ மற்றும் ராகவா லாரன்ஸ் நடித்துவரும் சந்திரமுகி 2 ஆகிய இரண்டு படங்களின் டிஜிட்டல் உரிமையை பெற்று இருப்பதாக பிரபல ஓடிடி நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜீத் நடித்த துணிவு திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அவர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் ஆன ‘ஏகே 62’ என்ற படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்க இருக்கிறார். இந்த நிலையில் ‘ஏகே 62’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை பெற்றுவிட்டதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளின் டிஜிட்டல் உரிமையை பெற்றிருப்பதாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அதேபோல் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பி வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2 படத்தின் டிஜிட்டல் உரிமையும் பெற்று இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாக நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் முன்னணி நடிகர்களின் படங்களை பெற்று வரும் நிலையில் தற்போது இந்த இரண்டு படங்களின் உரிமையையும் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.