
Entertainment
23 வருடங்களுக்கு முன்பே காரை பரிசளித்த அஜித்! கமல் பண்ணுனது அப்போ காப்பியா!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல் நடித்து திரைகளில் ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘விக்ரம்’. இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் முன்னணி நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இப்படத்தை கமல்ஹாசனின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்துள்ளது.
இப்படம் வெளிவந்து ரசிகர்க்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்று தற்போது வசூல் வேட்டையும் தொடர்ந்து நடத்திகொண்டு வருகிறது. இப்படத்தில் குறிப்பாக பத்து நிமிடம் தான் சூர்யா வந்தாலும் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக திறமையாக நடித்துள்ளார். பகத் பாசில், நரேன் ஆகிய இருவரும் நேர்மறையான கதாபாத்திரங்களில் கவனம் ஈர்க்கிறார்கள்.
விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் மற்றும் உதவி இயக்குனர்களுக்கு பரிசுப் பொருட்களை கொடுத்து அசத்தி வருகிறார் நடிகர் கமல். முதலாவதாக உதவி இயக்குனர் 13 பேருக்கு பைக்கை கொடுத்தார். அவர்களை தொடர்ந்து லோகேஷ்க்கு 80 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார் ஒன்றை பரிசாக கொடுத்து அனைவரையும் மகிழ்வித்தார்.
இது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது. ஒரு படம் வெற்றி பெறும் போது அதன் தயாரிப்பாளர் அல்லது படத்தின் கதாநாயகன் சம்பந்தப்பட்ட இயக்குநருக்கு கார் பரிசளிப்பது தமிழ் சினிமாவில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு தான். இதே போல நடிகர் சூர்யா இயக்குநர் ஹரிக்கு அப்படி கார் பரிசளித்துள்ளார்.
கொம்பன் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் அப்படத்தின் இயக்குநர் முத்தையாவுக்கு கார் பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அசுரன் படத்தின் வெற்றிக்காக கோடிகள் பெறும் விலையுயர்ந்த சொகுசுக் காரை தாணு வெற்றிமாறனுக்கு பரிசளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பண்பாடு தமிழ் சினிமாவில் இன்று சாதாரணமாக மாறிவிட்டது.
23 வருடங்களுக்கு முன் அஜித்தின் திரைவாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படங்களில் ஒன்று வாலி. இப்படத்தின் வெற்றியைப் பார்க்காமல், படத்தின் பர்ஸ்ட் காப்பியைப் பார்த்து எஸ்.ஜே.சூர்யாவுக்கு கார் பரிசளித்திருக்கிறார் தல அஜித். இத்தனைக்கும் தல அஜித் அப்போது தான் வளர்ந்து வரும் நடிகர்.
விக்ரம் பட சக்சஸ் மீட்டில் பரிமாறப்பட்ட உணவு! யாரு ரெடி பண்ணுனா தெரியுமா? அவரும் ஹீரோ தான்!
