அஜித் மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார் . அஜித் சில நாட்களாக படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட ஐரோப்பாவில் விடுமுறையை கழித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.
ஐரோப்பா டூரை முடித்து விட்டு இம்மாத இறுதியில் அஜித் இந்தியா திரும்ப உள்ளதாக எதிர்பார்க்கபடுகிறது அவர் வந்த பின் புனேவில் ஏகே 61 படத்தின் அடுக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளார்.
அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.
தற்போழுது சென்னையில் அவர் இல்லாத காட்சிக்கள் படமாக்கப்பட்டு வருகிறது. இந்த படம் தீபாவளிக்கு வரும் என எதிபார்க்கப்பட்ட நிலையில் படம் தற்போழுது கிறிஸ்துமஸ் வார இறுதி நாளில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம்.
இந்நிலையில் அஜித்திற்காக மொத்த படக்குழுவும் எதிர்பார்த்த நிலையில் இன்று சர்பிரைஸாக தற்போது அஜித் சென்னை திரும்பி விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விமானநிலையத்தில் அஜித் இருக்கும் புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தற்போது ’ஏகே 61’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படக்குழுவினர் புனே செல்ல உள்ளதாகவும் அங்கு அதிரடி ஸ்டண்ட் காட்சிகள், பைக் சேசிங் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
ஸ்டைலா நடந்து வரும் விஜய்! தொடர்ந்து வெளியாகும் வாரிசு படத்தின் காட்சிகள்!
#AjithKumar is back in Chennai after the world tour.#AK61 updates to flow soon! pic.twitter.com/qTTOYSvsI8
— Manobala Vijayabalan (@ManobalaV) July 22, 2022