அஜித்துக்காக விக்னேஷ் சிவன் செய்த செயல்…. பாராட்டும் அஜித் ரசிகர்கள்….!

முன்பு போல திரையுலகம் தற்போது இல்லை. அப்போதெல்லாம் இயக்குனர் என்றால் இயக்குனர் பணியை மட்டும் தான் செய்வார். ஆனால் தற்போது இயக்குனரே நடிக்கவும் செய்கிறார், பாடலும் பாடுகிறார் பன்முகத்திறைமையுடன் வலம் வருகிறார்கள். அந்த வகையில் ஒரே படத்தில் பிரபலமான இயக்குனர் தான் விக்னேஷ் சிவன்.

vignesh

போடா போடி படம் மூலம் அறிமுகமான இவர் அடுத்ததாக இயக்கிய நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இதன் மூலம் விக்னேஷ் வளர்ந்து வரும் இயக்குனர்கள் பட்டியலில் இடம் பிடித்தார். இதனை தொடர்ந்து தற்போது இவர் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படம் உருவாகியுள்ளது.

இப்படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா போன்ற டாப் நடிகர்கள் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வரும் பிப்ரவரி மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்குனர் மட்டுமல்ல பாடலாசிரியர் என்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

 நாங்க வேற மாதிரி

அதன்படி இவர் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தில் இரண்டு பாடல்களை எழுதியுள்ளார். நாங்க வேற மாதிரி மற்றும் அம்மா ஆகிய இரண்டு பாடல்களையும் விக்னேஷ் சிவன் தான் எழுதியுள்ளார். இந்த இரண்டு பாடல்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வலிமை படத்தின் இயக்குனர் வினோத் முதலில் விக்னேஷ் சிவனிடம் நாங்க வேற மாதிரி பாடலை மட்டும் எழுதுமாறு கேட்டாராம். விக்னேஷ் சிவனும் அந்த பாடலை ஒரே நாளில் எழுதி முடித்து விட்டாராம். இதனை தொடர்ந்து அம்மா பாடலையும் எழுதி தருமாறு வினோத் கேட்டு கொண்டுள்ளார்.

இதில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் இந்த இரண்டு பாடல்களையும் எழுதியதற்கு விக்னேஷ் சிவன் சம்பளம் வாங்கவே இல்லையாம். இயக்குனர் வினோத் கொடுத்ததற்கும் வாங்க மறுத்து விட்டாராம். எதையும் எதிர்பார்க்காமல் முழு அர்ப்பணிப்போடு பாடல் எழுதிய விக்னேஷ் சிவனை அஜித் ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment