Connect with us

எம்மாடியோ..! ஒரு டிக்கெட் 1000 ரூபாயா? போராட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள்..

193109 valimai

பொழுதுபோக்கு

எம்மாடியோ..! ஒரு டிக்கெட் 1000 ரூபாயா? போராட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள்..

எம்மாடியோ..! ஒரு டிக்கெட் 1000 ரூபாயா? போராட்டத்தில் ஈடுபட்ட அஜித் ரசிகர்கள்..

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித்.  இவர் நடித்துள்ள வலிமை திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பாக அமைந்துள்ளது. இந்த படமானது போனி கபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ளது.

இந்த நிலையில் திண்டுக்கல்லில் வலிமை படத்திற்கு கூடுதல் கட்டணம் கேட்பதாக கூறி அஜித் ரசிகர்கள் திரையரங்குகளில் பூட்டு போட்டு ரகளையில் ஈடுப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் வரும் 24- ஆம் தேதி அஜித் நடித்த வலிமை படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் திண்டிக்கல் ராஜேந்திரா திரையரங்கில் அன்றைய தினம் அதிகாலையில் வலிமை படத்தினை வெளியிட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.

இதற்கு மேளாலர் கூடுதல் கட்டணம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் திரையரங்கின் வாயில் அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர். பின்னர் திரையரங்குகளுக்கு பூட்டுப்போட்டு ரகளையில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top