நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை மையமாக கொண்டு படமாக்கப்பட்டு வருகிறது.
உண்மைக்கதையை மையமாக வைத்தே துணிவு படத்தை இயக்குனர் ஹச் வினோத் உருவாக்கியுள்ளார் 1985 ஆம் ஆண்டு பஞ்சாப் வங்கியில், 15 சீக்கியர்கள் போலீஸ் வேடத்தில் நுழைந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலருக்கு நிகரான பணத்தை கொள்ளையடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்தைத்தான் தற்ப்பொழுது படமாக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சமீபத்தில் 61 படத்தின் அப்டேட் ஒன்று இணையத்தில் வைரலாகி படத்திற்கு துணிவு என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து உள்ளனர். அதை தொடர்ந்து இரண்டாவது லுக்கும் வெளியானது.
இந்நிலையில் முதல் லுக் மற்றும் டைட்டில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, அதை தொடர்ந்து 3வது லுக் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட்து. மூன்றாவது போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடும் தேதியை படக்குழு அக்டோபர் மாதத்திற்கு மாற்றியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘நானே வருவேன்’ கதை என்னுடைய அல்ல..! செல்வராகவன் வெளியிட்ட ஷாக்கிங் அப்டேட் !
அப்டேட்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த தகவல் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.