தல அஜித் தற்போது ’வலிமை’ திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது புனே மற்றும் வாரணாசி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் ’வலிமை’ படப்பிடிப்பின் இடையே தனது நண்பர்களுடன் வாரணாசி ரோட்டுக் கடையில் உணவு சாப்பிட்டதாகவும் அவர் மாஸ்க் மற்றும் தொப்பி அணிந்து இருந்ததால் பலருக்கு அவரை அடையாளம் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது
ஆனால் அதே நேரத்தில் அவர் சாப்பிடும் போது மாஸ்க்கை கழட்டியதால் கடைக்காரர் அவரை அடையாளம் தெரிந்து கொண்டு அவருக்கு ஸ்பெஷல் கவனிப்பு செய்ததாகவும் அது மட்டுமின்றி அவர் சாப்பிட்டு முடித்ததும் அவருடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரிகிறது
இந்த புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படம் மிகப்பெரிய அளவில் தற்போது வைரலாகி வருகிறது. இது குறித்து அந்த கடையின் உரிமையாளர் கூறும்போது ’என்னுடைய கடையில் அஜித்தை பார்த்ததும் நான் ஆச்சரியமடைந்தேன். எங்கள் கடையில் தயாரான உணவுகளை அவர் விரும்பி சாப்பிட்டார். மற்ற வாடிக்கையாளர்கள் போலவே அவரும் நின்று கொண்டே சாப்பிட்டார். மறுநாளும் வந்தார் எந்த உணவு வகைகளை எப்படி செய்வது என்று என்னிடம் கேட்டு தெரிந்துக் கொண்டார் மேலும் எங்கள் கடையில் செய்யப்பட்ட உணவு எல்லாவற்றையும் வீடியோவாகவும் பதிவு செய்து கொண்டார்’ என்று தெரிவித்தார்
ரோட்டுகடை அஜித் நின்றுகொண்டே சாப்பிட்டதும் கடை உரிமையாளருடன் எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது