தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராஅ இருப்பவர் நடிகர் அஜித். இவர் எச்.வினோத் இயக்கத்தில் துணிவு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் வங்கியில் நடைபெறும் கொள்ளை சம்பவத்தை மையமாக வைத்து படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சமுத்திரக்கனி, ஜி.எம்.சுந்தர், மஞ்சுவாரியர், மகாநதி சங்கர், ஜான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிகிறது.
தற்போது துணிவு படத்தின் 2-வது சிங்கிள் பாடலான காசேதான் கடவுளடா என்ற பாடலில் நடிகர் அஜித் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை அஜித் ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். மேலும், படத்தின் ‘சில்லா சிலா’ என்ற பாடல் நாளை மறுதினம் வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.