Connect with us

ஸ்டேஜில் நடனமாடிய அஜித்! யாரும் நம்பாத அதிர்ச்சிகரமான வீடியோ !

ajith cinemapettai

பொழுதுபோக்கு

ஸ்டேஜில் நடனமாடிய அஜித்! யாரும் நம்பாத அதிர்ச்சிகரமான வீடியோ !

நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். இறுதியாக நடித்த வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் ஐதராபாத்தில் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது .இப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார்.லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

a63224e9091d60183237ef14b6ad370f original

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பிசியாக நடித்துவரும் அஜித் முன்னணி நடிகராக மட்டும் அல்லாமல் பல தனித்திறமைகளை தன்னிடையே கொண்டவர், அவரின் நடிப்புக்கு மட்டுமல்லாமல் அவரின் மற்ற திறமைகளுக்கும் என தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.சினிமாவில் மட்டும் அல்லாமல் ரியல் ஹீரோவாகவும் வாழ்ந்து வருபவர்.

சமீபத்தில் நடந்த மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் 4 தங்கம், 2 வெண்கல பதக்கம் என மொத்தம் 6 பதக்கங்களை வென்றார். அவர் திருச்சி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.சில காலங்களாக அஜித் நிகழ்ச்சியில் பொதுவாக கலந்து கொள்வதை விரும்புவது இல்லை.

becc0b856b167af934bc2f4f275c3707

இந்நிலையில் மேடையில் நடனம் ஆடிய வீடியோ தற்போழுது வைரலாகி வருகிறது,சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற நடன கலைஞர்கள் விழாவிற்கு வந்திருந்த அஜித், அவர்கள் அன்போடு கேட்டதற்காக மேடையில் நடனம் ஆடினார்.

இந்த வீடியோவை அஜித் ரசிகர்கள் சமுக வலைதளத்தில் தற்போது டிரெண்ட் செய்து வருகிறார்கள். மேடையில் அஜித் நடனமாடியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top