Entertainment
அஜீத்தை பாராட்டி தள்ளிய ஐஸ்வர்யா ராய்
நடிகர் அஜீத்குமார் ஐஸ்வர்யா ராயுடன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்துள்ளார். இருப்பினும் அஜீத்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை. சமீபத்தில் ஒரு விழாவில் மனம் திறந்து பேசிய ஐஸ்வர்யா ராய் அஜீத்தை வெகுவாக பாராட்டியுள்ளார்.

அஜித் ஒரு மிகவும் அற்புதமான ஒரு மனிதர் அவரது வெற்றியும் ரசிகர்களிடமிருந்து அவருக்கு வரவேற்பும் அன்பும் தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அஜித் இதற்கு தகுதியானவர்தான் என்றும் கூறியுள்ளார்.
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் நடித்த போது அஜித்துடன் நிறைய காட்சிகள் இல்லாவிட்டாலும் படப்பிடிப்பின் போது அவரை சந்தித்ததும் அவரது குடும்பத்தினரை சந்தித்ததும் தனக்கு நியாபகம் இருப்பதாக கூறினார்.
