மீண்டும் தள்ளி போகும் விடாமுயற்சி படப்பிடிப்பு.. காரணமாகும் அஜித்!

அஜித் நடிப்பில் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான துணிவு திரைப்படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால் கதைக்களம், கதையில் சில மாற்றங்கள் தயாரிப்பு சார்ந்த சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் கைவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து அஜித்தின் பிறந்தநாள் அன்றான மே ஒன்றாம் தேதி அஜித்தின் அடுத்த படமான விடாமுயற்சி படத்தின் அறிவிப்புகள் அதிரடியாக வெளியாகியது.

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்க உள்ளதாகவும், அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாக இருந்தது. அந்த தகவலை தொடர்ந்து அடுத்து நான்கு மாதங்களுக்கு படப்பிடிப்பு குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. தற்பொழுது அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் துபாய் அருகில் உள்ள அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்புகளில் அஜித்துடன் இணைந்து திரிஷாவும் கலந்து கொண்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

90களில் சினிமாவில் எண்டரி கொடுத்து இன்றளவும் முன்னணி ஹீரோவாக வலம் வரும் அஜித் காதல் மன்னன், ஆக்சன் ஹீரோ, வில்லன் கதாபாத்திரம் என அனைத்திலும் தனித்தன்மை வாய்ந்த தனது நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை தன் வசம் படுத்தியுள்ளார். இளமை காலங்களில் மெலிந்த தோற்றத்தில் இருந்து அஜித் நாளடைவில் சில உடல் உபாதைகளின் காரணமாக எடை அதிகரிக்க தொடங்கினார். அதன் பின் அடுத்தடுத்த அவரது படங்களில் அதிக எடை கொண்ட ஹீரோவாக வலம் வந்தார். சமீபத்தில் விவேகம் திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்த அஜித் அதற்கு பின் வெளியான அடுத்த திரைப்படங்களில் தனது இயல்பான எடைக்கு மாறினார்.

தற்போது மீண்டும் விடா முயற்சி திரைப்படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. அதற்கு ஏற்ப சமீப காலமாக வெளியாகும் அஜித்தின் புகைப்படங்களில் மாஸான ஒரு லுக் வெளியாகி உள்ளது. இந்த மெலிந்த தோற்றத்தில் அஜித்தின் புகைப்படங்களை பார்த்து அவரது ரசிகர்கள் விடாமுயற்சி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாடுகளில் பெரும்பகுதி படமாக்கப்பட உள்ளதாகவும், மீதியுள்ள காட்சிகள் மற்றும் சென்னையில் படமாக்க உள்ளதாக முன்னதாக தகவல் வெளியாக இருந்தது. தற்பொழுது அஜர்பைஜானில் நிலவும் சில சூழ்நிலை காரணமாக படப்பிடிப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.

ரஜினியை தொடர்ந்து கமல்ஹாசனுக்கு ஜோடியாகும் நயன்தாரா!

அங்கு நடக்கும் உள்நாட்டு போர் மற்றும் கடுமையான பணியின் காரணமாக படப்பிடிப்பில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. உடல் நலத்தில் அதிக அக்கறை கொண்ட அஜித் இந்த படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும் சில தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பிற்கு கால தாமதமாக வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. விடாமுயற்சி படத்திற்காக 60 நாட்கள் மட்டுமே அஜித்திடமிருந்து கால்ஷீட் பெற்ற நிலையில் தற்போது காலதாமதமாக படப்பிடிப்பு தளத்திற்கு அஜித் வருவதால் படப்பிடிப்பின் வேகம் தற்பொழுது மீண்டும் குறைய தொடங்கியுள்ளது.

அதனால் அஜித்திடம் மேலும் 30 நாட்கள் கால்ஷீட் தருமாறு படக்குழு பேசி வருகிறது. மேலும் சில நாட்கள் கிடைத்தால் மட்டுமே படத்தின் பெரும் பகுதி எடுத்து முடிக்க முடியும் என படக்குழு முடிவு செய்துள்ளது. அங்கு நிலவும் கடும் பனி மற்றும் மழையின் காரணமாக அஜித் அவர்களால் படப்பிடிப்பில் சரியாக கலந்து கொள்ள முடியவில்லை என்ற தகவலும் கிடைத்துள்ளது. சரியான நேரத்தில் படப்பிடிப்பு முடிந்தால் விடா முயற்சி திரைப்படம் அடுத்த ஆண்டு தமிழ் வருட பிறப்பு அல்லது கோடை விடுமுறைக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews