Connect with us

அஜித் 61 டைட்டில் – ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? சென்டிமென்ட் டச் கொடுக்கும் போனி கபுர்!

maxresdefault 46

பொழுதுபோக்கு

அஜித் 61 டைட்டில் – ஃபர்ஸ்ட்லுக் ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? சென்டிமென்ட் டச் கொடுக்கும் போனி கபுர்!

அஜித் தற்போழுது மூன்றாவது முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் ‘ஏகே 61’ படப்பிடிப்பில் நடித்துவருகிறார் . தற்போழுது இந்த படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்ட ஐரோப்பாவில் விடுமுறையை கழித்து வருகிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு, அவர் லண்டன் முழுவதும் பைக் பயணம் செய்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலானது.

தற்போழுது ஐரோப்பா டூரை முடித்து விட்டு இம்மாத இறுதியில் அஜித் இந்தியா திரும்ப உள்ளாராம். அவர் வந்த பின் புனேவில் ஏகே 61 படத்தின் அடுக்கட்ட ஷுட்டிங் துவங்கப்பட உள்ளார்.

ak61 1649754935 1651397658

அந்த ஷுட்டிங்கில் அஜித்துடன் மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, மகாநதி ஷங்கர் ,பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். புனேவை தொடர்ந்து சென்னையிலும் சில காட்சிகள் எடுக்கப்பட உள்ளது.இப்படத்திற்காக அஜித் தன் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் அப்டேட்காக அஜித் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்த படம் தீபாவளிக்கு வரும் என எதிபார்க்கப்பட்ட நிலையில் படம் தற்போழுது கிறிஸ்துமஸ் வார இறுதி நாளில் ஏகே 61 படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் செய்துள்ளதாம்.

அதனால் டைட்டில் வைக்காத ஏகே 61 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளனர். ஆகஸ்ட் 13 ம் தேதி மறைந்த தனது மனைவியும் பிரபல நடிகையுமான ஸ்ரீதேவியின் பிறந்தநாள் வருவதால் அன்று படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட தான் தயாரிப்பாளர் போனி கபுர் திட்டமிட்டுள்ளார்.

sridevi husband 1519615715

இதற்கு முன்னதாக ஸ்ரீதேவியின் இறந்த நாளான பிப்ரவரி 24 அன்று வலிமை படத்தை ரிலீஸ் செய்தார் போனி கபுர். தற்போதும் மனைவி சென்டிமென்ட் காரணமாக தான் ஏகே 61 படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட்லுக்கை வெளியிட திட்டமிட்டுள்ளாராம்.

‘ராஜமாதா’வாக மாறிய வரலட்சுமி சரத்குமார்!

இந்த தகவல் வெளியானதில் இருந்து ரசிகர்கள் AK61 படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வையை காண ஆவலாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top