நடிகர் அஜித் ஹெச் .வினோத் கூட்டணியில் மூன்றாவது முறையாக இணைந்து தனது 61 வது படத்தில் நடித்து வருகிறார். வலிமை படத்திற்கு ஏற்பட்ட எதிர்மறை விமர்சனங்கள் இந்த படத்திற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காக அஜித் மற்றும் வினோத் கடுமையா உழைத்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படம் செய்தித்தாள்களில் வரும் குற்றச் சம்பவங்களின் அடிப்படையில் கொண்டு உருவாக்கியதாகவும்,இதுவரை பல்வேறு இடங்களில் நடந்த வங்கி கொள்ளைச் சம்பவங்களின் அடிப்படையில் ரசிகர்களுக்கு சுவாரசியம் அளிக்கும் காட்சிகளை எச் வினோத் வடிவமைத்து வருவதாக கூறியுள்ளார்.
அஜித் 61 படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடப்பது நாம் அறிந்ததே ஆனால் ராமோஜி ராவ் செட்டில் நடக்க வில்லையாம்,அதற்கு பதிலாக ஏர்போர்ட் பக்கத்தில் அலுமினிய தொழிற்ச்சாலையில் வைத்து நடக்கிறதாம்.சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பை கொண்ட அந்த இடத்தில் தான் சிறப்பாக செட் அமைக்கப்பட்டு தற்போழுது படத்தின் வேலைகள் நடந்து வருகிறதாம் .
இந்த படத்தில் வங்கியில் கொள்ளை நடைபெறுவதை காட்சியாக்க சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு வருவதாக கூறப்பட்டது , அதற்காக பெரும் பொருட் செலவில் ஐதராபாத்தில் சென்னை அண்ணாசாலை போன்றே அச்சு அசலாக செட் போடப்பட்டது .
இந்த நிலையில் தற்போது படத்துக்காக போடப்படட இந்த செட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை அண்ணா சாலையில் உள்ள முக்கிய வங்கி போலவே செட் போடப்பட்டுள்ளது என்பது இந்த வீடியோ மூலம் தெரிகிறது.
இந்த வங்கி மட்டுமின்றி அண்ணா சாலையில் உள்ள முக்கிய இடங்களையம் அப்படியே திரையில் காண்பிக்க பட குழுவினர் தீவிர முயற்சி செய்து உள்ளனர் எனவே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் அதிகரித்து உள்ளது
#AK61 shooting spot
YOUR BANK 🥵@BoneyKapoor #HVinoth #AK61 pic.twitter.com/UN4VGnCwZf— 👑THUNIVU_MANI👑 (@ThalaFansMani) July 26, 2022