Connect with us

புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா!!

Aishwarya Dhanush Images 3

Entertainment

புது காதலருடன் ஊர் சுற்றும் ஐஸ்வர்யா!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரும் இவரது காதல் மனைவி ஐஸ்வர்யாவும் 18- ஆண்டுகளுக்கு பிறகு இல்லற வாழ்க்கையில் இருந்து பிரியப்போவதாக அறிவித்தனர்.

இந்த அறிவிப்பு சினிமாத்துறையும் மட்டுமல்லாது அவரது ரசிகர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இவர்களின் விவாகரத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் யாரிடமும் பேசாமல் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானதாக தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் இவர்களது பிரிவிற்கு சோசியல் மீடியாவில் பல்வேறு கருத்துக்கள் வந்தாலும் இதனை கண்டுகொள்ளாமல் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதனிடையே தற்போது ஐஸ்வர்யாவிற்கு தனக்கு முதல் காதலர் என்றால் சைக்கிள்தானாம். சைக்கிளில் செல்வதால் மன அமைதி கிடைப்பதோடு சந்தோஷமாகவும் இருப்பதாக  பதிவிட்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது இன்று அதிகாலை தான் சைக்கிளிங் சென்றபோது எடுத்த வீடியோவை சோசியல் மீடியாவில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள் அக்கா இந்த சைக்கிள் விலை எவ்வளவு ? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in Entertainment

To Top