சிம்புவுடன் இணையும் தனுஷ் மனைவி… விரைவில் காத்திருக்கும் தரமான சம்பவம்!

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்று இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில் 18 ஆண்டுகள் கழித்து பிரிந்துவிட்டார்கள்.

பிரிவுக்கு பிறகு அவரவர் வேலையில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். பிரிவிற்கு பிறகு ஐஸ்வர்யா மியூசிக் ஆல்பம் இயக்கும் வேளைகளில் இறங்கினார். இதற்காக ஐதராபாத்தில் தங்கி பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இடையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஐஸ்வர்யா, அதன்பின்னர் சிறிது கால ஓய்விற்கு பின்னர் ‘முசாபிர்’ ஆல்பம் பாடல் தயாரிக்கும் தனது பணியில் மீண்டும் இறங்கினார் ஐஸ்வர்யா. காதலர் தினத்தன்று இதற்கான புரோமோ வீடியோவும் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா அடுத்ததாக படம் ஒன்றை இயக்க தயாராகி வருவதாகவும், அதில் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே தனுஷை திருமணம் செய்வதற்கு முன்பு சிம்பு, ஐஸ்வர்யா காதலித்ததாகவும், கடந்த மாதம் சிம்பு டாக்டர் பட்டம் வாங்கியதற்கு ஐஸ்வர்யா வாழ்த்து கூறியதே குடும்ப வாழ்க்கையில் விரிசல் விழ காரணம் என்றும் வதந்திகள் உருவாகின.

தற்போது திரையுலகில் தனுஷுக்கு போட்டியாக பார்க்கப்படும் சிம்புவை வைத்து ஐஸ்வர்யா படம் இயக்க உள்ளதாக பரவி வரும் தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment