நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகளும், நடிகர் தனுசின் மனைவி தான் ஐஸ்வர்யா ரஜினி ஆவார்.இவர், நடிகர் தனுசை திருமணம் செய்து கொண்டார்,இவர்களுக்கு யாத்ரா (பிறப்பு 2006), லிங்கா (பிறப்பு 2010) என்ற இரு ஆண் குழந்தைகள் உள்ளனர்.
தனுஷ் நடித்த 3 (2012) திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார். மேலும் இவர் பின்னணிப் பாடகியாகவும் நடனக்கலைஞராகவும் பல திறமைகளை கொண்டுள்ளவர்.
2003 ஆம் ஆண்டில் வெளியான விசில் திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து பாடிய பாடலின் மூலமாக பின்னணிப் பாடகியாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 2010 ஆவது ஆண்டில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி உள்ளார்.
அப்படத்தில் இடம்பெற்ற உன்மேல ஆசைதான் பாடலையும் இவர் தான் பாடியிருந்தார். மேலும் அந்த படத்தில் நடித்த ரீமா சென்னுக்கு தமிழில் டப்பிங் கொடுத்திருந்தார் ஐஸ்வர்யா ரஜினி. அதன் பிறகு திருமண வாழ்வில் பிசியாக இருந்த தால் எந்த படங்களுக்கும் டப்பிங் கொடுக்க முடியாமல் போனது.
அவர், 12 வருடங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் ஒரு தமிழ் படத்தில் டப்பிங் பேசியிருக்கிறார். டப்பிங் பேசும் வீடியோ, புகைப்படத்தை தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா ரஜினி.
சன் பிக்சர்ஸ் வெளியிட்ட திடீர் அறிவிப்பு! எந்த படத்தின் அப்டேட் என குழப்பத்தில் ரசிகர்கள்!