Connect with us

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினிக்கு குரல் கொடுத்தது யார்? மாஸ் அப்டேட் !

ponniyin selvan actor-3

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வனில் ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினிக்கு குரல் கொடுத்தது யார்? மாஸ் அப்டேட் !

முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

ponnin selvan - 5

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர். பொன்னியின் செல்வன்-1′ திரைப்படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை, நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ,தற்போழுது ஐஸ்வர்யா ராய் நடிக்கும் நந்தினி என்னும் சக்தி வாய்ந்த கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

ராம் சரண் படத்தில் இணைந்த ஸ்பைடர் வில்லன் நடிகர்! மாஸ் அப்டேட்!

ponnin selvan - ishwarya

நந்தினியின் குரல் யார் என்பதை அறிய பலரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், நடிகையும் டப்பிங் கலைஞருமான தீபா வெங்கட் தான் டப்பிங் பேசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது

மேலும் தீபா வெங்கட் முன்னதாக எந்திரன் படத்தின் போது நடிகைக்கு டப்பிங் பேசியது குறிப்பிடத்தக்கது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top