Connect with us

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தனது வேலையே காட்டிய ஐஸ்வர்யா ராய்-த்ரிஷா! க்யூட் செல்ஃபி!

trisha1200

பொழுதுபோக்கு

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது தனது வேலையே காட்டிய ஐஸ்வர்யா ராய்-த்ரிஷா! க்யூட் செல்ஃபி!

பொன்னியின் செல்வன் சரித்திர திரைப்படம் மணிரத்னத்தின் லட்சிய திட்டமாகும், மேலும் இந்த வரலாற்று காவியத்தின் மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். இப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகும் என்றும், தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் இந்திய அளவில் வெளியாகும்.

மெட்ராஸ் டாக்கீஸுடன் இணைந்து லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டு பாகமாக உருவாகியுள்ளது. படத்தில் சியான் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஜெயராம், லால், ஆர் பார்த்திபன், மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ponniyin selvan audio launch date

படத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இசை பிரியர்களின் பிளேலிஸ்ட்களில் இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் ராட்சஸ மாமனே பாடலின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பாடல் குறித்து கார்த்தி வீடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

தற்போழுது படத்தின் புரோமோ வீடியோ ஒன்று நேற்று வெளியாகி வைரலாகி வருகிறது. தற்போழுது ‘பொன்னியின் செல்வன்’ குழுவினர் புரொமோஷனுக்காக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர்.

விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை தட்டி பறித்த அஜித்! வேற லெவல் ஷாக்கிங் அப்டேட் !

image 2022 09 22T181620.525 16638511064x3 1

இந்நிலையில் பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தளத்தில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் த்ரிஷா இருவரும் எடுத்துக் கொண்ட செல்ஃபி படம் சமூக வலைதளங்களில் தற்போழுது வைரலாகி வருகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top