பொன்னியின் செல்வன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தான் வில்லியா? எதிர்பார்க்காத ஷாக்கிங் நியூஸ் !

தென்னிந்திய முன்னணி இயக்குனர் மணிரத்னம் ,கல்கி எழுதிய சரித்திர நாவலான “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்கிய திரைப்படம்”பொன்னியின் செல்வன்”. இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். இதில் சியான் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ஜெயம் ரவி, கார்த்தி சிவகுமார், த்ரிஷா கிருஷ்ணன், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ரகுமான், கிஷோர், பார்த்திபன் என பலர் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனம் மிகப்பிரமாண்ட தொகைக்கு வாங்கியுள்ளது. ஐந்து மொழிகளில், இரண்டு பாகங்களும் சேர்ந்து மொத்தமாக 125 கோடிக்கு ஓடிடி உரிமை விற்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஶ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்துள்ளனர்.இந்நிலையில் படத்தின் இறுதிகட்ட பணிகள் வேறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது ,தற்போழுது ஐஸ்வர்யா ராய் நடிக்கும் கதாபாத்திரத்திற்கு டப்பிங் கொடுக்கும் பணி நடைபெற்று வருவதாக சமீபத்திய தகவல் வெளியானது.

ராவணன் இயக்குனர் மணிரத்னத்துடன் மீண்டும் இணைவதன் மூலம் ஐஸ்வர்யா ராய் பச்சன் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் வருகிறார். நடிகை இப்போது இரண்டு பாகங்கள் கொண்ட வரலாற்று காவியமான பொன்னியின் செல்வனில் நடித்துள்ளார், அதில் அவர் எதிர்மறையான பாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்தியன் 2 படத்திற்காக 14 மொழிகளில் பேசும் கமல்ஹாசன்! ஷாக்கிங் அப்டேட் !

நந்தினி மற்றும் மந்தாகினி தேவி என இரட்டை வேடங்களில் அவர் நடிப்பதாக சமூக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன, மேலும் அவர்களில் ஒருவர் எதிர்மறையான நிழல்களைக் கொண்டிருப்பார்.

நாவலில் நந்தினி சோழ சாம்ராஜ்யத்தின் அதிபரும் பொருளாளருமான பெரிய பழுவேட்டரையரின் மனைவி. அவள் ஒரு வலிமையான சூழ்ச்சித்திறன் கொண்ட பெண், அவள் அதிகாரத்திற்காக கணவனை சூழ்ச்சி செய்து சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு சதி செய்கிறாள்.