சென்னை, கோவையில் ஏர்டெல் (airtel) செல்போன் சேவை பாதிப்பு..!!

பத்து வருடங்களுக்கு முன்பு இந்தியாவிலேயே தொலைத்தொடர்பு சேவையில் முதலிடத்தில் காணப்பட்டிருந்தது ஏர்டெல் நிறுவனம். அதன் பின்னர் வந்த ஜியோவின் காரணமாக பல இடங்களில் ஏர்டெல்லுக்கு இருந்த மவுசு குறைந்தது.

அதுவும் தமிழகத்தில் ஏர்டெல் உபயோகிப்பவர்களை விட ஜியோ சிம் கார்டு உபயோகிப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக காணப்படுகிறது. மேலும் ஜியோ, ஏர்டெல்-ஐ விட சற்று குறைவான விலையில் அனைத்து விதமான சேவைகளை வழங்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பல இடங்களில் ஏர்டெல் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்ட வருகின்றன. அதுவும் முக்கிய தலைநகரமான சென்னை மற்றும் மாநகரம் கோவையில் ஏர்டெல் செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் கோயம்புத்தூரில் பல்வேறு இடங்களில் செல்போன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த சில நிமிடங்களாக ஏர்டெல், பிஎஸ்என்எல், ஜியோ என அனைத்து நெட்வொர்க்கில் இருந்தும் அழைத்து செல்லவில்லை. இதனால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment