மீண்டும் செயல்படுகிறது ஏர்செல்: வாடிக்கையாளர்கள் நிம்மதி

d856854a69b6fe972946ebe9f6a51245

கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் ஏர்செல் நெட்வொர்க் சேவை தடைபட்டிருந்த நிலையில் இன்று முதல் ஏர்செல் சேவை சீரடைய தொடங்கியுள்ளது. ஏர்செல் டவர் குத்தகைக்காரர்களுடன் ஏற்பட்ட சமரசப் பேச்சுக்குப் பின் முழு வீச்சில் செல்போன் டவர்கள் சீர் செய்யப்பட்டு வருவதாகவும், இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு தமிழகம் முழுவதும் ஏர்செல் சேவை வழக்கம்போல் இயங்கும் என்றும் ஏர்செல் நிறுவனத்தின் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன் தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்

மேலும் தற்போது 30% சேவை பாதிப்பு சரிசெய்யப்பட்டுள்ளதாகவும், வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு ஒருசில வினாடிகள் கழித்து மீண்டும் சுவிட்ச் ஆன் செய்தால் நெட்வொர்க் கிடைக்கும் என்றும் சங்கரநாராயணன் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏர்செல் சேவை மீண்டும் கிடைக்கப்பெற்றுவருவதால் அதன் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் தற்போது நிம்மதி பெருமூச்சு விட்டு வருகின்றனர்.

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on pinterest
Share on whatsapp
Share on telegram
Share on email
Share on print