2 ஆண்டுக்கு பின் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவை!! முதல் விமானத்தில் பயணம் செய்தவர் யார் தெரியுமா?
தற்போது இந்திய அளவில் சர்வதேச விமான சேவைகள் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் தற்போது புதுச்சேரியிலும் இதேபோல நிகழ்வு ஒன்று நடந்துள்ளது.
அதன்படி புதுச்சேரியில் 2 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது. இதில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பயணம் செய்துள்ளார்.
அதன்படி புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத், பெங்களூரு விமான சேவை தற்போது தொடங்கியுள்ளது. ஹைதராபாத்தில் இருந்து வந்த முதல் விமானத்தில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் வருகை புரிந்துள்ளார்.
ஹைதராபாத்தில் இருந்து முதல் விமானத்தில் வந்த துணைநிலை ஆளுநரை முதலமைச்சர் புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி விமான நிலையத்தில் வரவேற்றார். புதுச்சேரியில் இறங்கிய பின்பு துணைநிலை ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்துக் கொண்டு வருகிறார்.
அதில் விமானத்தில் பயணித்தவர்கள் எல்லாம் தங்களது மகிழ்ச்சியை எனக்கு தெரிவித்தார்கள் என்றும், புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்து தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்கள் என்றும் அவர் கூறினார்.
