5 வருடமாக கட்டுப்படுத்திய காற்று மாசுபாடு கட்டுப்பாடு வீண்! நேற்று ஒரே நாளில் மிக அதிகரிப்பு!!

சில வருடங்களுக்கு முன்பு டெல்லி மாநகரில் வெளியே செல்ல முடியாத அளவிற்கு காற்று மாசுபாடு காணப்பட்டது. வாகன ஓட்டிகள் இதனால் சாலை எங்கு உள்ளது என்று தெரியாமல் தவிக்கும் நிலையில் காணப்பட்டனர். அதனால் விடியற் காலத்திலும்கூட வாகன ஓட்டிகள் விளக்குகள் எரியூட்டப்பட்ட நிலையிலேயே வாகனம் ஓட்டும் அவலநிலைக்கு டெல்லி மக்கள் தள்ளப்பட்டனர். கோபால் ராய்

இந்த நிலையில் அந்த காற்று மாசுபாடு படிப்படியாக தற்போது ஓரளவிற்கு டெல்லி மாநகரில் குறைந்து காணப்பட்டது. ஆனால் மீண்டும் டெல்லியில் காற்று மாசு அதிகரித்ததாக மாநில அமைச்சர் கோபால் ராய் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.

இவை தடையை மீறி பட்டாசு வெடித்ததால் டெல்லியில் காற்று மாசு மீண்டும் உயர்ந்துள்ளதாக மாநில அமைச்சர் கோபால் ராய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அண்டை மாநிலங்களில் விவசாயிகள் எரித்ததாலும் டெல்லியில் மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்து உள்ளது என்றும் கோபால் ராய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டு ஒப்பிட்டு பார்க்கும் போது அக்டோபர் காற்று மாசுபாட்டின் அளவானது மிகக் குறைந்த அளவில்தான் பதிவாகி இருந்தது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் மீண்டும் நேற்றைய தினம் தடை செய்யப்பட்ட பட்டாசுகள் வெடித்ததால் அங்கு மீண்டும் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment