ஏர் இந்தியாவின் 7 ஆயிரம் ஊழியர்கள் வெளியேற நோட்டீஸ்: தனியார்மயமானதால் தவிப்பு!

இதுவரை அரசு நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா தற்போது தனியார் கைக்கு மாறி உள்ளதை அடுத்து அந்த நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த 7 ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றப்பட்ட உள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏர் இந்தியா நிறுவனத்தை 18,000 கோடி கொடுத்து டாடா நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக சமீபத்தில் வெளியான செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாடா குழுமம் விலைக்கு வாங்கி உள்ள நிலையில் ஏர் இந்தியா நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் தங்கியிருக்கும் ஊழியர்கள் சுமார் 7,000 பேர் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

6 மாதத்திற்குள் ஏர் இந்தியா ஊழியர்கள் தங்களது தங்குமிடங்களை காலி செய்யாவிட்டால் 15 லட்சம் அபராதம் கட்டவேண்டும் என்றும் அதுமட்டுமின்றி இரண்டு மடங்கு வாடகை செலுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் அவர்கள் கண்டனம் தெரிவித்து மத்திய விமானத்துறை போக்குவரத்து அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment