பணக்கஷ்டத்தில பயணிகளே இல்லை! விமானங்கள் எண்ணிக்கை குறைத்த ஏர் இந்தியா!!

உலக நாடுகளை திரும்பி பார்க்கும் வகையில் இலங்கையில் பெரும் பண வீக்கம் நிகழ்கிறது. இதனால் இலங்கையில் உள்ள மக்கள் பட்டினியின் காரணமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் முப்பத்தாறு மணி நேரத்திற்கு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் இலங்கை வாசிகள் கடல் வழியாக அண்டை நாடுகளுக்கு தப்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதுவும் குறிப்பாக அனைத்து விதமான சேவைகளின் விலை உயர்வால் பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதனால் ஒவ்வொரு நாடும் இலங்கைக்கான விமான சேவையை குறைத்துக் கொண்டு வருகிறது.

இந்த நிலையில் இந்தியாவின் விமான சேவையான ஏர் இந்தியாவும் விமானங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக காணபடுகிறது. அதன்படி பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் இந்தியா-இலங்கை இடையிலான விமான சேவையை குறைப்பதாக ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இலங்கைக்கு வாரம் 16 விமானங்கள் இயக்கப்படும் நிலையில் அந்த எண்ணிக்கை ஏப்ரல் 9ஆம் தேதி முதல் 13ஆக குறைக்கப்படும் என்று ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment