Connect with us

விமானத்தில் ஏறியவுடன் பதிவு செய்த ஃபேஸ்புக் போஸ்ட்: உயிரிழந்த பயணியின் பரிதாபம்

News

விமானத்தில் ஏறியவுடன் பதிவு செய்த ஃபேஸ்புக் போஸ்ட்: உயிரிழந்த பயணியின் பரிதாபம்

b55aec89e05e1e210484c16d571fe88d

துபாயில் இருந்து கேரளா வந்த ஏர் இந்தியா விமானம் நேற்று இரவு தரையிறங்கிய போது திடீரென விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் விமானம் இரண்டாக பிளந்தது விமானி மற்றும் துணை விமானி பலியாகினர்.

மேலும் 191 பயணிகள் இந்த விமானத்தில் பயணம் செய்த நிலையில் இதுவரை 15 பேர் பலியாகி இருப்பதாகவும் மேலும் சில காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த பயணிகளில் ஒருவர் தனது குடும்பத்துடன் இந்த விமானத்தில் ஏறிய ஒரு சில நிமிடங்களில் புகைப்படம் எடுத்து அதை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்

இந்த நிலையில் இந்த நபர் தற்போது மரணம் அடைந்து இருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அது மட்டுமின்றி அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய இருவரும் விமான விபத்தில் உயிர் பிழைத்து விட்டாலும் தற்போது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தகவல் தெரியாமல் அவரது குடும்பத்தினர் அவர்களை தேடி வருகின்றனர் இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

விமானம் கிளம்பிய ஒரு சில நிமிடங்களுக்கு முன் அந்த பயணி பதிவு செய்த பேஸ்புக் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் அவருக்கு நெட்டிசன்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading
You may also like...
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

More in News

To Top