பிரபல விமான நிறுவனம் ஏர் இந்தியாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சஸ்பெண்ட் செய்யப்பட்ட விமானியை மீண்டும் பணியாற்றுவது குறித்து உரிய முடிவெடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி விமான நிலைய சுற்றுசுவற்றில் விமானம் மோதியதை அடுத்து விமானி சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து விமானி கணேஷ் பாபு தாக்கல் செய்த மனு மீது முடிவெடுக்க ஹைகோர்ட் ஆணையிட்டுள்ளது.
2018ம் ஆண்டில் 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சுற்றுச்சுவரில் மோதியது. தொழில்நுட்பம் கோளாறால் குறைந்த உயரத்தில் பறந்து விமானம் ஐந்தடி உயர சுற்று சுவர் மீது மோதி, அங்கு உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்திலும் மோதியது.
விமான விபத்தை அடுத்து விமானியின் உரிமத்தை மூன்றாண்டுகளுக்கு ரத்து செய்தது சிவில் விமான போக்குவரத்து இயக்ககம். 2018ஆம் ஆண்டு வரை 4270 மணி நேரம் விபத்தில்லாமல் கணேஷ் பாபு ஓட்டியதாக அவரது வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளார்.
டேக் ஆபின் போது என்ஜின் உந்துதலை கண்காணிக்க தவறிவிட்டதாக விமான போக்குவரத்து இயக்குனரகம் புகார் அளித்துள்ளது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மகாதேவன் விமானி மனு தொடர்பாக 4 வாரத்தில் முடிவு எடுக்க உத்தரவிட்டார்.